பட்டாசு தொழில் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பாஜக சார்பில் நடைபெறும் என் மண் என் மக்கள் நடைபயணத்தின் பன்னிரண்டாம் நாளான நேற்று 23 வது சட்டமன்றத் தொகுதியாக சிவகாசி தொகுதியில் பாஜக தலைவர் அண்ணாமலை காரனேசன் பேருந்து நிறுத்தத்தில் இருந்து துவங்கி பத்ரகாளியம்மன் கோவில், காமராஜர் சிலை,ரத வீதி வழியாக சிவகாசி பேருந்து நிலையத்திற்கு வந்தார். அப்போது அவர் பேசியதாவது,
“இந்த நகருக்கு வருவதே பெரும் புண்ணியம். காசிக்கு நிகரான சிவன்கோவில் சிவகாசியில் உள்ளது. காசிக்கு செல்ல முடியாதவர்கள் சிவகாசி சிவன்கோவிலுக்கு வந்தாலே காசிக்கு சென்ற பயன் கிடைக்கும். குட்டி ஜப்பானாக சிவகாசி இருக்கிறது.
இங்கு இந்தியாவிற்கு தேவையான 90 சதவீதம் பட்டாசுகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
அதே போல் 70 சதவீதம் தீப்பெட்டிகளும் தயாரிக்கப்படுகிறது.
இந்தியாவிலேயே அதிக அச்சகம் உள்ள நகர் சிவகாசி. இந்த பகுதியை சேர்ந்த 2
பெரியவர்கள் வங்காளத்துக்கு சென்று அங்கு தீப்பெட்டி தயாரிப்பை கற்று இன்று
இந்த பகுதியில் ஏராளமான தீப்பெட்டி மற்றும் பட்டாசு ஆலைகளை நிறுவி பல லட்சம்
தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.
பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த நாள் முதல் இன்று வரை பட்டாசு தொழில் வளர்ச்சிக்கு பெரும் உதவியாக இருந்து இருக்கிறது. மோடி பிரதமர் ஆனவுடன் சீன பட்டாசு இறக்குமதிக்கு தடை விதித்தார். அதே போல் தீப்பெட்டி தொழிலுக்கு பெரும் எதிராக இருந்த சீன
லைட்டர்களை இந்திய அரசு தடை விதித்துள்ளது. பட்டாசு தொழிலில் 8 லட்சம் பேர்
இருக்கிறீர்கள்.
பட்டாசு தொழிலுக்கு உறுதுணையாக எப்போதும் ப.ஜ.க. இருக்கும். பட்டாசு தொழிலுக்கு உள்ள பிரச்னைக்கு இந்த ஆண்டு நிரந்தர தீர்வு காணப்படும். பட்டாசு தொழிலுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரிச் சலுகைகளை அளித்தார். தி.மு.க., காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்கள் பட்டாசு தொழிலுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். பட்டாசுகளை தடை செய்தால் இந்து பண்டிகைகளை எப்படி கொண்டாடுவது? பராம்பரியத்தை எப்படி காப்பாற்றுவது? பட்டாசு தொழில் அழிந்து விட்டால் இந்து கலாச்சாரம் அழிந்து விடும். தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு விதிக்கக் கூடாது. தீபாவளி பண்டிகை கலாச்சாராத்தோடு கலந்தது.
இந்தியா மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று அமைச்சர் எ.வ. வேலு பேசு
கிறார். இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டிக்கவில்லை. இந்தியா மீது
நம்பிக்கை இல்லை, தனி நாடு வேண்டும் என்றால் அடுத்து வரும் நாடாளுமன்ற
தேர்தலில் தி.மு.க.வினர் போட்டியிட வேண்டாம். எம்.பி.யாக இருக்கிற தி.முக.வினர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து விட்டு தமிழ்நாடு திரும்பட்டும்.
பிரதமர் நரேந்திர மோடி இளைஞர்களை படிங்க என்று கூறுகிறார். தி.முக. அரசு குடிங்க., குடிங்க என்று கூறுகிறது. விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி வளர்ச்சிக்கு மாணிக்கம்தாகூர் எம்.பி. தடையாக இருக்கிறார்” என அண்ணாமலை கூறினார்.







