மழைநீர் கால்வாய்க்காக தோண்டிய பள்ளத்தில் தவறிவிழுந்த இளைஞர் உயிரிழப்பு…

சென்னை பூந்தமல்லியில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இரண்டு இளைஞர்கள், மின்வாரியம் சார்பில் தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்த நிலையில், ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சென்னை பூந்தமல்லியில் தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலையில்…

சென்னை பூந்தமல்லியில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இரண்டு இளைஞர்கள், மின்வாரியம் சார்பில் தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்த நிலையில், ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை பூந்தமல்லியில் தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலையில் மழைநீர் வடிகால் மற்றும் மின்வாரியம் சார்பில் பள்ளம் தோண்டப்பட்டு உயரழுத்த கேபிள் இணைப்பு தடம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்த வழியாக ராமகுணா, மதிவாணன் என்ற இரு இளைஞர்கள் தாங்கள் வேலை செய்யும் நிறுவனத்தில் இரவு பணிக்காக இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.

அப்போது சாலையில் விளக்கு எரியாமல் இருட்டாக இருந்ததால் இரவு பணிக்கு சென்ற இளைஞர்கள் பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கினர். இதில் தலையில் பலத்த காயங்களுடன் கம்பிகள் குத்திய நிலையில் ராமகுணா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் சென்ற மதிவாணன் படுகாயமடைந்தார். நெடுஞ்சாலையில் பணிகள் நடைபெறும் பகுதியில் விளக்குகள் எரியாததும், எச்சரிக்கை பதாகைகள் வைக்கப்படாததுமே இந்த கோர விபத்துக்கு காரணம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.