பள்ளி ஆசிரியை அடித்ததால் காயமடைந்த 3 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி!

வேலூர் அருகே அரசு பள்ளி ஆசிரியை அடித்ததால் காயமடைந்த 3 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த இலவம்பாடி பகுதியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் 7ம் வகுப்பு மாணவ-மாணவியர் வீட்டுபாடம்…

வேலூர் அருகே அரசு பள்ளி ஆசிரியை அடித்ததால் காயமடைந்த 3 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த இலவம்பாடி பகுதியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் 7ம் வகுப்பு மாணவ-மாணவியர் வீட்டுபாடம் எழுதவில்லை எனக்கூறி ஆங்கில ஆசிரியை தீபலட்சுமி பிரம்பால் கண்மூடித்தனமாக தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் 3 மாணவிகளுக்கு தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டதால், அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.