சாலை பெயர் மாற்றத்தில் பாஜகவுக்கு சம்பந்தமா? எல்.முருகன் விளக்கம்!

பெரியார் ஈவெரா சாலை பெயர் மாற்றம் செய்யப்பட்டதற்கும் பாஜகவிற்கும் எந்த சம்பந்தம் இல்லை என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் விளக்கம் அளித்துள்ளார். சென்னை தி.நகரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த எல்.முருகன், கொரோனா இரண்டாவது…

பெரியார் ஈவெரா சாலை பெயர் மாற்றம் செய்யப்பட்டதற்கும் பாஜகவிற்கும் எந்த சம்பந்தம் இல்லை என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை தி.நகரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த எல்.முருகன், கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவிவரும் நிலையில், பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை பாஜகவினர் வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். மதுரையில் அம்பேத்கர் சிலைக்கு பாஜகவினர் மாலை அணிவிக்க விடாமல் தடுத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மீது நடவடிகை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

சென்னையில் பெரியார் ஈ.வெரா சாலை பெயர் மாற்றம் செய்யப்பட்டதில் பாஜகவிற்கு சம்பந்தம் இல்லை என தெரிவித்த அவர், நெடுஞ்சாலை துறை அறிவிப்பில் grand Western trunk road என்ற பெயர் முன்பே இருந்ததாக கூறினார். ஆட்சியில் இருந்தபோது அந்த பெயரை மாற்ற திமுக ஏன் முயலவில்லை என்றும் எல்.முருகன் கேள்வி எழுப்பினார்.

இதனிடையே சாலை பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைமைச் செயலாளரிடம் மனு அளித்த திமுக எம்.பி ஆர்.எஸ்.பாரதி, பெயர் மாற்றத்திற்கு பாஜக மாநில தலைவர் எல்.முருகன் கூறும் கருத்து பொருத்தமற்றதாக இருப்பதாக கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.