முக்கியச் செய்திகள் தமிழகம்

பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு

பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாத காலம் பரோலை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க 30 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் என அரசுக்கு அவரது தாயார் அற்புதம்மாள் கடந்த ஏப்ரல் மாதம் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த மே மாதம் 28ம் தேதி ஜோலார்பேட்டையில் உள்ள வீட்டுக்கு சென்றார். வீட்டில் இருந்தபடி சிறுநீரக தொற்று உள்ளிட்ட உடல் சார்ந்த பிரச்னைகளுக்கு பேரறிவாளன் சிகிச்சை எடுத்து வந்தார்.

இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் 28-ம் தேதி பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. தொடர்ந்து பரோல் காலத்தை மேலும் நீட்டிக்க வேண்டும் என்ற அற்புதம்மாளின் கோரிக்கையை ஏற்று பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இன்றுடன் பேரறிவாளனுக்கு பரோல் முடியும் நிலையில் மூன்றாவது முறையாக பரோல் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

தமிழக தேர்தலில் 3-ஆயிரத்துக்கு மேற்பட்டோர் போட்டி!

எல்.ரேணுகாதேவி

ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, விருதுநகரில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!

Saravana

சென்னையில் இன்று 1,600 முகாம்களில் தடுப்பூசி

Ezhilarasan