கிலோவிற்கு ரூ. 20 ரூபாய் அளவிற்கு விலை குறைந்த தக்காளி…

தக்காளியின் வரத்து அதிகரிப்பால் கிலோவிற்கு ரூ. 20 ரூபாய் அளவிற்கு குறைந்துள்ளது. கடந்த ஒரு மாத காலத்திற்கு முன்பு விளைச்சல் அதிகரிப்பால் தக்காளி விலை கிலோ 10 ரூபாய் என்று இருந்த நிலையில் கடந்த…

தக்காளியின் வரத்து அதிகரிப்பால் கிலோவிற்கு ரூ. 20 ரூபாய் அளவிற்கு குறைந்துள்ளது.

கடந்த ஒரு மாத காலத்திற்கு முன்பு விளைச்சல் அதிகரிப்பால் தக்காளி விலை கிலோ 10 ரூபாய் என்று இருந்த நிலையில் கடந்த இரு வார காலமாகச் சென்னை கோயம்பேட்டில் ஒரு கிலோ தக்காளி 120 முதல் 150 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்தனர்.

தக்காளியோடு சேர்ந்து காய்கறிகளின் விலையும் கிடுகிடுவென உயர்ந்தது பெரும் சிரமத்தை ஏற்படுத்தியது.  இந்த தக்காளி விலையில் நேற்று சற்று குறைந்து காணப்பட்டது. அந்த வகையில் கிலோவுக்கு ரூ.20 வரை குறைந்திருந்தது.

குறிப்பாக கோயம்பேடு காய்கறி சந்தைக்கு நாள் ஒன்றுக்கு 1100 டன் தக்காளி தேவை உள்ள நிலையில், இன்று  தக்காளி வரத்து சற்று அதிகரித்துள்ளது. இதனால் தக்காளி விலை குறைந்து 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.