தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு நிறுவனம் மூலம் இன்று முதல் ஒரு கிலோ தக்காளி 70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தக்காளி விலையை குறைக்கும் வகையில், இன்று முதல் சில்லறை விலையில் ஒரு கிலோ 70 ரூபாய்க்கு விற்பனை செய்ய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு நிறுவனம் மற்றும் தேசிய வேளாண் கூட்டுறவு சந்தை கூட்டமைப்பு நிறுவனங்களுக்கு மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைக்கம் அறிவுறுத்தியுள்ளது.
இதற்காக அதிக விளைச்சல் உள்ள ஆந்திரப்பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்ட்ரா மாநிலங்களில் இருந்து கடந்த ஒரு மாதமாக தக்காளியை கொள்முதல் செய்து விலை அதிகரித்து காணப்படும் நகரங்களில் உள்ள மையங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. தலைநகர் டெல்லியில் சில்லறை விலையில் தக்காளி விற்பனையை தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு நிறுவனம் கடந்த 14ம் தேதி முதல் மேற்கொண்டு வருகிறது.







