பொதுமக்கள் அனைவரும் கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டும் : முதல்வர்

கொரோனா பரவலின் தீவிரத்தை தடுக்கவே முழு ஊரடங்கை அறிவித்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். பொதுமக்கள் அனைவரும் கட்டுப்பாடுகளை கடைபிடிக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவலின் 2வது அலை நாளுக்கு நாள் புதிய…

கொரோனா பரவலின் தீவிரத்தை தடுக்கவே முழு ஊரடங்கை அறிவித்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். பொதுமக்கள் அனைவரும் கட்டுப்பாடுகளை கடைபிடிக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவலின் 2வது அலை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டிவரும் நிலை, நாளை மறுநாள் முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது குறித்து விளக்கம் அளிக்கும் வகையில் சமூக வலைதளம் மூலம் நேரலையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று 3 மணி நேரத்திற்கு மேல் அரசுதுறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தியதாக கூறினார்.

திமுக அரசு ஒரு கட்சியின் அரசாக இல்லாமல் அனைத்து மக்களின் அரசாக இருக்கும் என்றும் அவர் உறுதி அளித்தார். கொரோனா குறித்து மக்கள் அச்சம்கொள்ள தேவையில்லை எனக்கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கொரோனா தொற்றே இல்லாத நிலையை தமிழகத்தில் உருவாக்க அரசு முழு முயற்சி எடுத்து வருவதாக கூறினார். பொதுமக்கள் அனைவரும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடைபிடிக்குமாறும் முதலமைச்சர் வேண்டுகோள் மு.க.ஸ்டாலின் விடுத்தார்.

இதற்கிடையே, தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் தொலைபேசியில் பேசி பிரதமர் மோடி கேட்டறிந்தார். அப்போது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.