கொரோனா சோதனை செய்தால் பிரித்துவிடுவார்களோ என்ற அச்சத்தில் தம்பதி செய்த விபரீத செயல்!

சென்னை மதுரவாயல் பகுதியில் கொரோனா பரிசோதனை செய்து தங்களை பிரித்து விடுவார்களோ என்ற அச்சத்தில் வயதான தம்பதி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரவாயல் வேல் நகரில் வசித்துவரும் அர்ஜூன் –…

சென்னை மதுரவாயல் பகுதியில் கொரோனா பரிசோதனை செய்து தங்களை பிரித்து விடுவார்களோ என்ற அச்சத்தில் வயதான தம்பதி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரவாயல் வேல் நகரில் வசித்துவரும் அர்ஜூன் – அஞ்சலாட்சி தம்பதியருக்கு பிள்ளைகள் கிடையாது. இவர்களுக்கு உணவு கொடுப்பதற்காக உறவினர் ஒருவர் வீட்டிற்கு சென்றபோது, வீடு உள்பக்கமாக பூட்டியிருந்துள்ளது. அதனால் அவர் ஜன்னல் வழியாக பார்த்தபோது, மூத்த தம்பதியர் இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதனை கண்ட அவர் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் அங்குசென்று போலீசார் விசாரணை நடத்தினர். அதில் உடல்நிலை சரியில்லாத அஞ்சலாட்சிக்கு கொரோனா பரிசோதனை செய்தால் தங்களை பிரித்துவிடுவார்களோ என்ற அச்சத்தில் உயிரை மாய்த்துக் கொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் மதுரவாயல் பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.