வாட்ஸ்அப் குழு மூலம் மக்களின் பிரச்னைத் தீர்க்கப்படும் – அதிமுக வேட்பாளர்

வாட்ஸ்அப் குழு அமைத்து மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்போவதாக தஞ்சாவூர் தொகுதி அதிமுக வேட்பாளர் அறிவுடை நம்பி தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்டம் சீனிவாசபுரத்தில் அதிமுக வேட்பாளர் அறிவுடை நம்பி வீடு, வீடாக சென்று மக்களிடம்…

வாட்ஸ்அப் குழு அமைத்து மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்போவதாக தஞ்சாவூர் தொகுதி அதிமுக வேட்பாளர் அறிவுடை நம்பி தெரிவித்துள்ளார்.

தஞ்சை மாவட்டம் சீனிவாசபுரத்தில் அதிமுக வேட்பாளர் அறிவுடை நம்பி வீடு, வீடாக சென்று மக்களிடம் வாக்கு சேகரித்தார். தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு மக்களின் குறைகளை தீர்ப்பதற்காக சமூக வலைதளமான வாட்ஸ்அப்பில் குழு ஒன்று அமைக்க உள்ளதாகத் தெரிவித்தார்.

அந்தக் வாட்ஸ்அப் குழுவில் தெரிவிக்கப்படும் மக்கள் குறைகளை மாவட்ட ஆட்சியருக்கு தெரிவிப்பதோடு சட்டமன்றத்திலும் தெரிவிக்கப்பட்டு தீர்த்து வைப்பதாக அறிவுடை நம்பி மக்களுக்கு உறுதி அளித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.