பிரதமர் மோடியின் ஆட்சியில் மக்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது- மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் பொதுமக்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது என்று மத்திய ரயில்வேதுறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், நாடு குறுக்குவழி அரசியலை…

பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் பொதுமக்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது என்று மத்திய ரயில்வேதுறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், நாடு குறுக்குவழி அரசியலை நோக்கி செல்லாமல் நல்லாட்சியை நோக்கி செல்ல வேண்டும் என்பதில் பிரதமர் நரேந்திர மோடிக்கு தெளிவான பார்வை உள்ளது. நாட்டில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் நல்லாட்சி சென்றடைவதை உறுதி செய்ய டிஜிட்டல் கட்டமைப்பை பிரதமர் தயாரித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்ட திட்டங்களை நிறைவேற்றுவதில் எப்போதும் கவனம் செலுத்துகிறார். இதனாலேயே ஒவ்வொரு மாதமும் முன்னேற்றக் கூட்டங்கள் நடைபெறுகின்றன. பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் பொதுமக்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது.

ஏழைகளின் நலனுக்காக ஒவ்வொரு ரூபாயிலும் 15 பைசா மட்டுமே அவர்களுக்குச் சென்றடைகிறது என்று முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஒருமுறை கூறியிருந்தார். ஆனால், இன்றைக்கு நூறு சதவீதத் தொகை டிபிடி மூலம் பயனாளிகளைச் சென்றடைகிறது.

நாடு குறுக்குவழி அரசியலை நோக்கி செல்லாமல் நல்லாட்சியை நோக்கி செல்ல வேண்டும் என்பதில் பிரதமர் மோடிக்கு தெளிவான பார்வை உள்ளது. நாட்டில் உள்ள ஒவ்வொருவரையும் நல்லாட்சி சென்றடைவதை உறுதி செய்ய டிஜிட்டல் கட்டமைப்பை பிரதமர் தயாரித்துள்ளார்.

இதுவரை 1.25 லட்சம் கோடி கறுப்பு பணம் மத்திய அரசால் மீட்கப்பட்டுள்ளது. 4,600 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.