மெட்ரோ ரயில் நிலையப் பணியில் திருநங்கை: பொதுமக்கள் வரவேற்பு!

மெட்ரோ ரயில் நிலையங்களில் பட்டதாரி திருநங்கைகளை பணியமர்த்தி கவுரவப்படுத்தியுள்ளதற்கு, பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் கடந்த 14ஆம் தேதி முதல் வண்ணாரபேட்டை முதல் விம்கோ நகர் வரை புதிய ரயில்…

மெட்ரோ ரயில் நிலையங்களில் பட்டதாரி திருநங்கைகளை பணியமர்த்தி கவுரவப்படுத்தியுள்ளதற்கு, பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் கடந்த 14ஆம் தேதி முதல் வண்ணாரபேட்டை முதல் விம்கோ நகர் வரை புதிய ரயில் சேவையை விரிவாக்கம் செய்தது.

இந்த நிலையில் புதிய ரயில் நிலையங்களில் பயணச்சீட்டு வழங்குதல், பயணிகள் உடமைகளை பரிசோதனை செய்தல் மற்றும் மேற்பார்வையாளர் உள்ளிட்ட பணிகளில் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் 13 பட்டதாரி திருநங்கைகளை, மெட்ரோ ரயில் நிர்வாகம் பணியமர்த்தியுள்ளது. இதற்கு மெட்ரோ ரயில் பயணிகளும், பொதுமக்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply