உதயநிதி அமைச்சராக வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்: அமைச்சர் செந்தில் பாலாஜி

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என மக்கள் விரும்புவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கோடங்கிபட்டி பகுதியில், திமுக சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நேற்று நடைபெற்றது. இதில்…

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என மக்கள் விரும்புவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கோடங்கிபட்டி பகுதியில், திமுக சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நேற்று நடைபெற்றது. இதில் கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளரும், மின்சாரத்துறை அமைச்சருமான செந்தில் பாலாஜி கலந்து கொண்டு பார்வையிட்டார்.
நிகழ்ச்சியில் கரூர் மேற்கு நகர திமுக பொறுப்பாளர் தாரணி சரவணன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி பேசும்போது, திமுக தலைவர் உத்தரவுபடி கரூர் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் என பகுதிவாரியாக புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம்
தொடங்கப் பட்டு, உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் நான்கு தொகுதிகளிலும் சுமார் 9 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதில் 3 லட்சம் வாக்காளர்களை திமுக உறுப்பினர்களாக இணைக்கப்பட உள்ளனர்.

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் எடுத்துக்காட்டாக செயல்படுகிறார். நடந்து முடிந்த தேர்தல்களில் 234 தொகுதிகளிலும் பயணித்து மக்களின் அன்பையும் பாசத்தையும் பெற்றவர். அவர் அமைச்சராக வர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள், எங்களது விருப்பமும் அதுவாகவே உள்ளது. திமுக சார்பில் தேர்தல் நேரத்தில் அளிக்கப்பட்ட 502 வாக்குறுதிகளில் ஆட்சி பொறுப்பேற்ற ஆறு மாதங்களில் 202 வாக்குறுதிகளை முதலமைச்சர் நிறைவேற்றியுள் ளார். இவ்வாறு அவர் கூறினார்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.