ஊரை காலி செய்த ஊர் மக்கள் – எல்லை அம்மனுக்கு சிறப்பு வழிபாடு!

நாட்றம்பள்ளி அருகே 17 ஆண்டுகளுக்குப் பின் மாரியம்மன் கோயிலில் திருவிழா நடத்தி விட்டு, எல்லையம்மனுக்கு வழிபாடு செய்ய கிராம மக்கள் ஊரை விட்டு வெளியேறினர். திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த கொத்தூர் பகுதியில் 17…

நாட்றம்பள்ளி அருகே 17 ஆண்டுகளுக்குப் பின் மாரியம்மன் கோயிலில் திருவிழா நடத்தி விட்டு, எல்லையம்மனுக்கு வழிபாடு செய்ய கிராம மக்கள் ஊரை விட்டு வெளியேறினர்.

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த கொத்தூர் பகுதியில் 17
ஆண்டுகளுக்குப் பிறகு மாரியம்மன் ஆலயத்தில் திருவிழா நடை பெற்றது. அப்போது அம்மனுக்கு பூங்கரங்கம் எடுத்தல் மாவிளக்கு போன்ற பல்வேறு வேண்டுதலை நிறைவேற்றி கிராம மக்கள் வழிபாடு செய்தனர்.

இதனை தொடர்ந்து கிராமங்கள் செழிக்கவும், கிராம மக்கள் மகிழ்ச்சியாக வாழவும், நோய் நொடி இல்லாமல் கிராமத்தில் உள்ள அனைத்து மக்களும் செழிப்புடன் வாழ எல்லையில் உள்ள எல்லை அம்மனுக்கு வழிபாடு செய்வதற்காக கிராம
மக்கள் ஊரை விட்டு ஒரு நாள் காலி செய்து சென்றனர்.

பின்பு எல்லையம்மனுக்கு வழிபாடு செய்து ஊரில் உள்ளே நுழைவதற்கு கிடா வெட்டி பூஜைகள் செய்து ஊர் கிராம மக்கள் ஊருக்குள் நுழைந்து வேண்டுதலை நிறைவேற்றினர்.

ம. ஶ்ரீ மரகதம்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.