சமூக இடைவெளியை மறந்து மீன்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்

கடலூர் துறைமுகத்தில் பொதுமக்கள் சமூக இடைவெளியின்றி மீன்கள் வாங்க குவிந்ததால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது. கடலூர் முதுநகர் துறைமுகத்தில் இருந்து நாள்தோறும் சிங்காரத்தோப்பு, தேவனாம்பட்டினம், அக்கரைகோரி, சோனங்குப்பம், ராசாபேட்டை, உள்ளிட்ட மீனவ கிராமங்களைச்…

கடலூர் துறைமுகத்தில் பொதுமக்கள் சமூக இடைவெளியின்றி மீன்கள் வாங்க குவிந்ததால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.

கடலூர் முதுநகர் துறைமுகத்தில் இருந்து நாள்தோறும் சிங்காரத்தோப்பு, தேவனாம்பட்டினம், அக்கரைகோரி, சோனங்குப்பம், ராசாபேட்டை, உள்ளிட்ட மீனவ கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் படகுகளில் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருவது வழக்கம்.

கடலூர் முதுநகர் துறைமுகம்

அவ்வாறு பிடித்து வரப்படும் மீன்களை உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கி செல்வர். கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு பல்வேறு வழிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டும் அதனை மீறி அசைவ பிரியர்கள் சந்தைகளில் குவிகின்றனர்.

அதன்படி கடலூர் துறைமுகப் பகுதியில் பொதுமக்கள் சமூக இடைவெளியை மறந்து கூடி மீன்களை வாங்கினர். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிகாலை முதலே, பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மீன்களை வாங்குவதற்கு கடலூர் துறைமுகம் பகுதியில் திரண்டதால் அப்பகுதியில் மீண்டும் கொரோனா நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.