முக்கியச் செய்திகள் விளையாட்டு

’அவரை இந்தியாவின் இன்ஜமாம்னு அங்க சொல்றாங்க’ -சோயிப் அக்தர்

அந்த வீரரை, இந்தியாவின் இன்ஜமாம் உல் ஹக் என்று பாகிஸ்தானில் கூறுகிறார்கள் என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இன்ஜமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார். 

டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தற்போது முதல் சுற்று ஆட்டங்கள் நடந்து வருகிறது. இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்பட தரவரிசையில் டாப்-8 இடங்களை பிடித்த அணிகள் நேரடியாக ‘சூப்பர்-12’ சுற்றில் களம் இறங்குகின்றன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்திய அணி வரும் 24 ஆம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் டி-20 உலகக் கோப்பையை எந்த அணி வெல்லும் என்று முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன் ஜமாம் உல், ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் பிரெட் லீ ஆகியோர் இந்தியாவுக்கு அதிக வாய்ப்பிருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் கூறும்போது, இந்திய அணியை சிறப்பானது என்று பாகிஸ்தானில் பாராட்டுகிறார்கள். அவர்கள் வெளிப்படையாகவே இதை பேசுகிறார்கள். விராத் கோலியை சிறந்த வீரராக கருதுகிறார்கள். ரோகித் சர்மாவை இந்தியாவின் இன்ஜமாம் உல் ஹக் என்று கூறுகிறார்கள். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் ரிஷப் பண்ட் ஆட்டத்தையும் பாராட்டுகிறார்கள். இந்தியாவை பற்றி பாகிஸ்தானில் சிறந்த எண்ணம் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறும்போது, நான் நடுநிலையான கருத்தையே தெரிவிக்கிறேன். இந்தியாவில் எனக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள். நான், இந்தியர்கள் மிகவும் விரும்பும் பாகிஸ்தானிய அதிர்ஷ்டசாலி’ என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஒரே நாளில் 13 லட்சம் தடுப்பூசி செலுத்தி ஆந்திர அரசு அசத்தல் சாதனை!

G SaravanaKumar

செஸ் ஒலிம்பியாட் போட்டி; பயிற்சிகள் தொடக்கம்

G SaravanaKumar

“பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும்” – முதலமைச்சர் அறிவுறுத்தல்

Niruban Chakkaaravarthi