தேர்தல் அதிகாரி திடீர் மரணம்: ஒத்திவைக்கப்பட்ட மறைமுகத் தேர்தல்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் மறைமுகத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட தாங்கி ஊராட்சியில், துணை தலைவர் பதவிக்காக…

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் மறைமுகத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட தாங்கி ஊராட்சியில், துணை தலைவர் பதவிக்காக வார்டு உறுப்பினர்களிடம் மறைமுகத் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது தேர்தல் நடத்தும் அதிகாரியாக பணியாற்றிய பள்ளி ஆசிரியர் ஹரி என்பவர் வாக்கெடுப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது அவருக்கு திடீரென உடல்நிலை கோளாறு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதையடுத்து ஊர்மக்கள் ஆம்பூலன்ஸ் மூலம் அவரை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆசிரியர் ஹரி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து தாங்கி ஊராட்சியில் நடைபெற்று வந்த மறைமுகத் தேர்தல் மறு உத்தரவு வரும்வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.