மிக்ஜாம் புயலுக்கு பின் சென்னை திரும்பும் மக்கள் – தாம்பரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்!

மிக்ஜாம் புயலால் சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள் சென்னைக்கு திரும்புவதல்,  தாம்பரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் பாதிப்பில் இருந்து தற்போது இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில், வெளியூரில் இருந்து…

மிக்ஜாம் புயலால் சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள் சென்னைக்கு திரும்புவதல்,  தாம்பரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

மிக்ஜாம் புயல் பாதிப்பில் இருந்து தற்போது இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில், வெளியூரில் இருந்து பொதுமக்கள் சென்னை திரும்புவதால் தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த 4ம் தேதி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், மக்கள் கடும்  அவதி அடைந்தனர். இந்த நிலையில்,  குடியிருப்புகளில் தண்ணீர் தேங்கியதால் வீடுகளில் வசிக்க முடியாமல் மக்கள் தங்களது சொந்த ஊருக்கும்,  உறவினர் வீடுகளுக்கும் சென்றனர்.

இதையும் படியுங்கள் : யார் யாருக்கு ரூ.6,000 நிவாரணம்? நிதித்துறை செயலாளர் உதயசந்திரன் காணொலி வாயிலாக ஆலோசனை!

இந்த நிலையில், 5 நாட்களுக்கு பிறகு தற்போது வெள்ளநீர் வடிந்து வரும் நிலையில், மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர். மேலும், டிசம்பர் 11 ஆம் தேதி (திங்கட்கிழமை) முதல் பள்ளி, கல்லூரிகளும் திறக்கப்பட இருப்பதால், மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையின் காரணமாக வெளியூர் சென்றவர்கள் தற்போது சென்னை திரும்புகின்றனர். இதனால் பெருங்களத்தூர், தாம்பரம் உள்ளிட்ட பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மேலும், தாம்பரத்தில் போக்குவரத்து போலீசார் போதிய அளவில் இல்லாததால் வாகனங்கள் அனிவகுத்து நிற்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக,  சென்னை நோக்கி செல்லும் சாலையில் வாகனங்கள் 2 கிமீட்டர் தூரம் அணிவகுத்து நிற்கின்றன. இதனால் தாம்பரத்தில் கடும்  போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.