“உண்மையான தீயசக்தி யார் என்பதை மக்கள் உணர்ந்து வருகிறார்கள்” – மு.க.ஸ்டாலின்

சிங்கப்பெண் படையை காப்பாற்றவே தனி படை உருவாக்க வேண்டிய அளவுக்கு ஆட்சி உள்ளது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை திருவான்மியூரில் திமுக முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் இல்லத் திருமண விழா நடைபெற்றது. இதில் திமுக தலைவரும் உன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது, “வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு, நம் ஆட்சியில் 23.56 இலட்சத்திற்கும் மேற்பட்ட பட்டாக்கள் வழங்கப்பட்டன. இந்த சாதனையை நிகழ்த்தியது இந்தியாவிலேயே நம் மாநிலம் மட்டும்தான்.

தமிழ்நாட்டில் பாலியல் வன்கொடுமையா? இல்லை போதை நடமாட்டமா? என்பதாகத்தான் இன்றைய த.வெ.க ஆட்சி நடந்து வருகிறது. உண்மையான தீயசக்தி யார் என்பதை மக்கள் உணர்ந்து வருகிறார்கள். இன்றைக்கு கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள், திருட்டு போன்ற செயல்கள் இல்லாத செய்திகளே இல்லை.

மாநிலத்தில் அதிகரித்து வரும் குற்றச் சம்பவங்களால் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பற்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக, பெண்களைப் பாதுகாக்கக்கூடிய சிங்கப்பெண் படையைப் பாதுகாப்பதற்கே இப்போது இன்னொரு பாதுகாப்பு படையை உருவாக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. குழந்தைகள் கடத்தல் தொடர்பான அதிர்ச்சியூட்டும் செய்திகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன, போதைப்பொருள் புழக்கம் தடுத்து நிறுத்த முடியாமல் பெருமளவில் பரவி வருகிரது” இவ்வாறு அவர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.