புதுச்சேரி மக்களுக்கு ஜிப்மரில் உரிய சிகிச்சை அளிக்கவில்லை என்பது உண்மை: முதலமைச்சர் ரங்கசாமி

புதுச்சேரி மக்களுக்கு ஜிப்மரில் உரிய சிகிச்சை அளிக்கவில்லை என்பது உண்மை என்று முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் 3வது நாள் அமர்வு இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் உறுப்பினர்களின் கேள்வி நேரம்,…

புதுச்சேரி மக்களுக்கு ஜிப்மரில் உரிய சிகிச்சை அளிக்கவில்லை என்பது உண்மை என்று முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் 3வது நாள் அமர்வு இன்று
நடைபெற்றது. இந்நிகழ்வில் உறுப்பினர்களின் கேள்வி நேரம், பூஜ்ய நேரத்தில்
உறுப்பினர்கள் பேச்சு மற்றும் கடந்த 22 ஆம் தேதி முதல்வர் ரங்கசாமி தாக்கல்
செய்த பட்ஜெட்டிற்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம்
நடைபெற்றது. அப்போது, கேள்வி நேரத்தில் பேசிய சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் சிவா, பிரதமரின் ஆயுஷ்மான் மருத்துவக் காப்பீடு திட்டத்தை மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவமனையில் கூட ஏற்றுக்கொள்வதில்லை. இது ஒரு ஏமாற்றுத் திட்டம் என குற்றம்சாட்டினார்.

இதற்கு பதிலளித்த முதல்வர் ரங்கசாமி, புதுச்சேரி மக்களுக்கு ஜிப்மர்
மருத்துவமனை உரிய சிகிச்சை அளிக்கவில்லை என்பது உண்மைதான் என்றும், ஆயுஷ்மான் திட்டத்தை ஜிப்மர் மருத்துவமனை செயல்படுத்தாதது குறித்து விசாரிக்கப்படும் என ரங்கசாமி உறுதி செய்துள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவமனையில் பிரதமரின் ஆயுஷ்மான் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என முதல்வரே கூறியுள்ளது புதுச்சேரி மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.