மத்திய அரசு பணிகளுக்கு தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் விண்ணப்பிக்க வேண்டும்: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

மத்திய அரசு பணிகளுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் விண்ணப்பிக்க வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேட்டுக் கொண்டுள்ளார்.  நாடு முழுவதும் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க வகை செய்யும்…

மத்திய அரசு பணிகளுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் விண்ணப்பிக்க வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேட்டுக் கொண்டுள்ளார். 

நாடு முழுவதும் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க வகை செய்யும் ரோஜ்கார் மேளா என்ற திட்டம் பிரதமர் மோடியால் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி வைக்கப்பட்டது.

இந்நிலையில், நாடு முழுவதும் 46 இடங்களில் ரோஜ்கார் மோளா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அப்போது அரசின் பல்வேறு துறைகள் மற்றும் அமைப்புகளுக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை காணொலி காட்சி வழியே பிரதமர் மோடி வழங்கினார்.

சென்னை எழும்பூரில் நடைபெற்ற நிகழ்வில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று 26 பேருக்கு பணி நியமன வழங்கி அவர்களுடன் கலந்துரையாடினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது :

தமிழ்நாட்டில் மொத்தம் 553 நபர்களுக்கு பணி வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு பணிகளுக்கு தமிழ்நாடடை சேர்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் விண்ணப்பிக்க வேண்டும்.

தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் குறைவாக விண்ணப்பம் செய்வதால் காலி பணியிடங்களை நிரப்ப வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் பணிக்கு வருகிறார்கள். தமிழகத்தில் இருப்பவர்கள் தேர்வு எழுதி வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எந்த பணிக்கு எந்த ஊருக்கு செல்கிறோமோ அங்கு நடைமுறையில் உள்ள மாநில மொழியை கற்றுக் கொள்வது அவசியம் என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.