விடுமுறை முடிந்து தென்மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வரும் மக்களால் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு கடந்த வெள்ளியன்று நடைபெற்றது. இதற்காக சென்னை உள்பட வெளியூர்களிலிருந்த மக்கள் பெரும்பாலானோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்குப்பதிவு செய்தனர்.
இந்த நிலையில், வெள்ளி, சனி, ஞாயிறு(ஏப். 21) ஆகிய 3 நாள்கள் தொடர் விடுமுறைக்கு பின், தங்கள் சொந்த ஊர்களிலிருந்து மக்கள் மீண்டும் சென்னைக்கு திரும்பி வருகின்றனர்.
இதன்காரணமாக சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள்கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் மெல்ல ஊர்ந்து செல்வதால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.







