கேரள மாநிலம் திருச்சூர் கடல் பகுதியில் குவியல் குவியலாக கரை ஒதுங்கிய மீன்களை பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் அள்ளி சென்றனர்.

காலநிலை மாற்றம் ஏற்படும் போது மீன்கள் கரை ஒதுங்குவது தொடர் நிகழ்வாக அரங்கேறி வருகிறது. இந்நிலையில் அரபி கடலில் ஏற்பட்ட திடீர் காலநிலை மாற்றத்தால் கேரள மாநிலம் திருச்சூரர் அருகே வாடன பள்ளி,பொக்கான்சேரி கடற்கரை பகுதிகளில் குவியல் குவியலாக சாளை மீன்கள் கரை ஒதுங்கின. இதை பார்த்த பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை மகிழ்ச்சியுடன் மீன்களை கூடையில் அள்ளி சென்றனர். இந்தக் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
இதுகுறித்து மீனவர் ஒருவர் கூறும் போது கடல் பகுதியில் குளிர்ந்த கால நிலை ஏற்படும் போது இது போன்று சிறு சிறு மீன்கள் கரை நோக்கி வருவதாகவும் அவ்வாறு வரும் போது அலை அடித்து கரையில் வீசுவதாகவும் தெரிவித்தார்.அதோடு இந்த நிகழ்வு சிறிது நேரம் தான் நிகழும் எனவும் அவர் தெரிவித்தார்.







