வெயிலை தணித்தக் கோடை மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி!

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடும் கோடை வெயில் நிலவி வரும் சூழலில் நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெப்பம் நிலவியதால் …

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடும் கோடை வெயில் நிலவி வரும் சூழலில் நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெப்பம் நிலவியதால்  மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரங்களில் தண்ணீர் வெகுவாக குறைந்து வந்தது. இந்த நிலையில்  நாகர்கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் அரை மணி நேரம் பெய்த மழையின் காரணமாக அப்பகுதிகளில் வெப்பம் தணிந்து இதமான சூழ்நிலை காணப்பட்டது.

மேலும் நாகர்கோவில் நகர பகுதிகளில் 10 முதல் 15 தினங்களுக்கு ஒரு முறை மட்டுமே  குடிநீர் வழங்கப்படும் வேளையில், தற்போது அணைப்பகுதிகளில் மழை பெய்ததால் குடிநீர் பிரச்சனை தீர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

—ரூபி. காமராஜ்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.