மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால் வறுமைக்கோட்டை நீக்கி, செழுமைக்கோட்டை உருவாக்குவோம், என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தலில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள கமல்ஹாசன், இன்று சேலம் மற்றும் தருமபுரி மாவட்டங்களில் வாக்கு சேகரித்தார். தருமபுரியில் பேசிய அவர், இல்லத்தரசிகளுக்கு ஊதியம் வழங்கும் தங்கள் கட்சியின் திட்டத்தை, கிண்டல் செய்தவர்கள், தற்போது அந்த திட்டத்தை உன்னிப்பாக உற்றுநோக்குவதாகக் கூறினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
முன்னதாக சேலம் மாவட்டம் மேச்சேரியில், பிரச்சாரம் செய்த கமல்ஹாசன், மக்கள் மாற்றத்திற்கு தயாராகிவிட்டதாகக் கூறினார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம், கதர் ஆடையை தாம் ஊக்குவித்து வருவதாகவும் கமல்ஹாசன் தெரிவித்தார்.