அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் முன்னாள் முதல்வர் கருணாநிதி மரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜன்செல்லப்பா கூறியுள்ளார்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் மதுரை காதக்கிணற்றில் பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய மதுரை வடக்கு தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வி.வி.ராஜன் செல்லப்பா செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், திமுகவை விட அதிமுக பன்மடங்கு வியூகம் வைத்து தேர்தலை சந்திப்பதாகக் கூறினார். அதிமுகவின் வெற்றி வாய்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் ராஜன் செல்லப்பா தெரிவித்தார்.







