சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் புதிதாக 1 லட்சத்து ஆயிரத்து 474 பயனாளிகளுக்கு ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்கப்பட்டது.
சென்னை தலைமை செயலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில், புதிதாக 1 லட்சத்து ஆயிரத்து 474 பயனாளிகளுக்கு ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணையை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.
ஒய்வூதியத் திட்டங்களுக்கென 2021-2022ஆம் ஆண்டுக்கான, திருத்திய வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டில், 4 ஆயிரத்து 807 கோடி ரூபாய் நிதியை தமிழ்நாடு அரசு ஒதுக்கியுள்ளது. மாற்றுத் திறனுடையோர், ஆதரவற்ற விதவைகள், முதலமைச்சர் உழவர் பாதுகாப்புத் திட்டம் உள்ளிட்ட 9 திட்டங்களின் கீழ் ஒய்வூதியம் பெறுவதற்கான ஆணையை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.








