அரசு ஊழியர்களைப் போல் வணிகர்களுக்கும் ஒய்வூதியம் வழங்க வேண்டும்: தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவை வலியுறுத்தல்!

அரசு ஊழியர்களைப் போல் வணிகர்களுக்கும் ஒய்வூதியம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவை வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவையின் மாநில தலைவர் முத்துக்குமார் இன்று நியூஸ் 7 தமிழுக்கு பேட்டியளித்தார்.…

அரசு ஊழியர்களைப் போல் வணிகர்களுக்கும் ஒய்வூதியம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவை வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவையின் மாநில தலைவர் முத்துக்குமார் இன்று நியூஸ் 7 தமிழுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், அரசுக்கு கிடைத்து வரும் வரி வருவாய்க்கு முக்கிய காரணமாக இருப்பவர்கள் வணிகர்கள் என்றார். எனவே, 65 வயதை கடந்த அனைத்து வணிகர்களுக்கும் அரசு ஓய்வூதியம் அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்ட முத்துக்குமார், அரசின் வரி வருவாயில் 10 சதவீதத்தை இதற்காக ஒதுக்க அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். தங்களின் இந்த கோரிக்கையை அரசு நிறைவேற்றாவிட்டால் தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவை சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றும் முத்துக்குமார் குறிப்பிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply