30.5 C
Chennai
May 13, 2024
முக்கியச் செய்திகள் உலகம்

தீபாவளிப் பண்டிகையை பொது விடுமுறை நாளாக அறிவித்தது பென்சில்வேனியா!

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் தீபாவளிக்கு பொது விடுமுறை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்துகளின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக தீபாவளி கொண்டாடப்படுகிறது. வாழ்வில் உள்ள தீமைகள் அகன்று, நன்மைகள் பெருகும் பெருநாளாக இந்து மக்களால் இந்த பண்டிகை மதிக்கப்படுகிறது. மக்கள் புத்தாடை உடுத்தி, இனிப்புகளை வழங்கி உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் இந்த பண்டிகையை ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகளவில் வசிக்கும் இந்து மக்களும், பிற மதத்தினரும் தீபாவளியை கொண்டாடுவது வழக்கம். அமெரிக்காவில் கடந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையை வெள்ளை மாளிகையில் வைத்து அதிபர் ஜோ பைடன் கொண்டாடி இருந்தார். இந்நிலையில், அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் ஆண்டுதோறும் தீபாவளிக்கு பொது விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : மாற்றுத்திறனாளி மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு – காரணம் என்ன? 

பென்சில்வேனியாவில் தெற்காசியாவைச் சேர்ந்த 2 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை கொண்டாடி வரும் நிலையில், இந்த பண்டிகையை முன்னிட்டு பொது விடுமுறை வழங்குவதற்கான சட்டத்தை அம்மாகாண மேலவையில் செனட்டர்கள் கிரெக் ரோத்மேன் மற்றும் நிகில் சவல் அறிமுகப்படுத்தினர்.

இதனைத் தொடர்ந்து இந்த சட்டம் பென்சில்வேனியா மாகாண மேலவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை செனட்டர் நிகில் சவல் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதன்மூலம் அங்கு தீபாவளிப் பண்டிகை பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading