நாட்டின் தினசரி கொரோனா பாதிப்பு நேற்றை விட இன்று சற்று குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9 ஆயிரத்து 355 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் சமீப காலமாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வந்தது. மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில், சமீபகாலமாக 10 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வந்த கொரோனா பாதிப்பு, தற்போது சற்று குறைய தொடங்கியுள்ளது. நேற்று 9 ஆயிரத்து 629 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9 ஆயிரத்து 355 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நாடு முழுவதும் கொரோனா தொற்றால் 57 ஆயிரத்து 410 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9 ஆயிரத்து 355 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரே நாளில் கொரோனா தொற்றால் 20 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 12 ஆயிரத்து 932 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஒரே நாளில் 2 லட்சத்து 29 ஆயிரத்து 175 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
- பி.ஜேம்ஸ் லிசா








