MRI ஸ்கேன் செய்த உலகின் முதல் பென்குயின் என்ற பெருமையை பெற்ற ‘சாக்கா’

உலகில் முதன்முறையாக, இங்கிலாந்தில் பென்குயின் ஒன்றிற்கு வெற்றிகரமான MRI பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இது கால்நடை மருத்துவத் துறையில் ஒரு பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது. இங்கிலாந்தில் உள்ள சீ லைஃப், வெய்மவுத்தில் வசிக்கும் ‘சாக்கா’ என்ற…

உலகில் முதன்முறையாக, இங்கிலாந்தில் பென்குயின் ஒன்றிற்கு வெற்றிகரமான MRI பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இது கால்நடை மருத்துவத் துறையில் ஒரு பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது.

இங்கிலாந்தில் உள்ள சீ லைஃப், வெய்மவுத்தில் வசிக்கும் ‘சாக்கா’ என்ற பெயருடைய ஒரு பென்குயின், நீச்சலடிக்கும் போது அதற்கு ‘தள்ளல்’ பிரச்சனை (சமநிலை பிரச்சினை) இருந்ததால், நீந்த முடியாமல் மிகவும் சிரமத்தில் இருந்துள்ளது. இதனால் அதற்கு இருக்கும் உடல் பிரச்சனையை அறிந்துக் கொள்வதற்காக, சோமர்செட்டில் உள்ள கியூ கால்நடை நிபுணர்கள் அந்த பென்குயினுக்கு MRI ஸ்கேன் செய்தனர். இதன் மூலம் உலகில் முதன்முறையாக MRI ஸ்கேன் செய்யப்பட்ட பென்குயின் என்ற பெருமையை ‘சாக்கா’ பெற்றுள்ளதோடு, இந்நிகழ்வு கால்நடை மருத்துவத் துறையில் ஒரு முக்கிய மைல் கல்லாகவும் கருதப்படுகிறது.

மேலும், MRI அறிக்கையில் பென்குயினின் சமநிலையைப் பற்றி கவலைப்பட பெரியளவில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை எனவும், அதே இனத்தை சேர்ந்த பென்குயின்களுடன் சாக்காவை பழக வைக்கும் போது ஆரோக்கியமான மற்றும் அதன் சமூக வாழ்க்கையை இயல்பாக வாழ முடிவதோடு, இந்த செயல்முறை சாக்காவுக்கு முடிந்தவரை இந்த பிரச்சனையிலிருந்து விடுபட்டு, வசதியாக இருப்பதை உறுதிசெய்ய உதவும்
என கூறப்பட்டுள்ளது.

இது தவிர, இந்த ஆய்வில் பல புதிய தகவல்கள் வெளியாகியுள்ளதாக கால்நடை மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதில் பென்குயின்கள் பூனைகள் மற்றும் நாய்களைப் போலல்லாமல் நீண்ட நேரம் தங்கள் மூச்சை அடக்கி வைத்திருக்கும் திறமை பெற்றுள்ளதாகவும், இந்த MRI ஸ்கேன் முறையை மற்ற கால்நடை மருத்துவர்கள் மற்றும் உயிரியல் பூங்காக்களுக்கு விரிவுப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினால் பிற உயிரினங்கள் குறித்த பல அறிய தகவல்களை நம்மால் கண்டறிய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.