இத்தாலி மக்கள் அதிகாரப்பூர்வ தகவல் தொடர்புகளில் ஆங்கில மொழியை பயன்படுத்தினால் அபராதம் விதிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
உலகளவில் பெரும்பான்மையான மக்களால் பயன்படுத்தப்படும் மொழியாக ஆங்கிலம் உள்ளது. இந்தியாவிலும் கூட அந்தந்த மாநில மொழிகளுக்கு அடுத்ததாக ஆங்கிலமே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் பின்பற்றப்படும் இருமொழிக் கொள்கையில், தமிழுக்கு அடுத்த நிலையில் ஆங்கிலமே இடம்பெற்றுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இவ்வாறு ஆங்கிலம் உலகம் முழுவதும் பரவி இருக்கும் நிலையில், பல நாடுகளில் ஆங்கில மொழிப் பயன்பாட்டிற்கு எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன. தங்களது சொந்த மொழிகள் மெது மெதுவாக அழிந்து போவதற்கு ஆங்கில மொழிப் பயன்பாடே காரணம் என்று எதிர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படியுங்கள் : ஊழியர்களுக்கு வழங்கும் இலவச சிற்றுண்டிகள், சலவை சேவைகள் நிறுத்தம்; செலவுகளை குறைக்க கூகிள் நிறுவனத்தின் அதிரடி முடிவு!
இந்நிலையில் இத்தாலி நாடாளுமன்றத்தில் வெளிநாட்டு மொழிகளின் பயன்பாடு தொடர்பான புதிய மசோதாவை அந்நாட்டு பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி தலைமையிலான அமைச்சரவை கொண்டு வந்துள்ளது. அதில், இத்தாலி மக்கள் அதிகாரப்பூர்வ தகவல் தொடர்புகளில் எந்தவொரு வெளிநாட்டு மொழியையும் பேசக்கூடாது என்றும், குறிப்பாக ஆங்கில மொழி பயன்பாட்டை தவிர்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மீறி பயன்படுத்துவோர்க்கு 1,00,000 யூரோ, அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.89 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும், வெளிநாட்டு மொழிகளை பயன்படுத்துவது இத்தாலி மொழியை இழிவுப்படுத்துவது போல உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த புதிய மசோதா இத்தாலி நாடாளுமன்ற விவாதத்திற்கு பிறகு நிறைவேற்றப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.