முக்கியச் செய்திகள் உலகம்

தைவான் சென்ற நான்சி பெலோசிக்கு உற்சாக வரவேற்பு

சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி தைவான் சென்ற அமெரிக்க நாடாளுமன்ற கீழவைத் தலைவர் நான்சி பெலோசிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

ஆசிய நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் நான்சி பெலோசி, மலேசியாவுக்குச் சென்று பின்னர் அங்கிருந்து தைவான் சென்றுள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சீனாவின் எதிர்ப்பு காரணமாக தென் சீன கடல் பகுதியை தவிர்த்து இந்தோனேஷிய கிழக்குப் பகுதி வழியாக தைவான் தலைநகர் தைபேயை பெலோசி நேற்றிரவு சென்றடைந்தார். அங்கு அவருக்கு தைவான் அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தங்கள் நாட்டின் அங்கம் தைவான் என சீனா கூறி வரும் நிலையில், தைவான் சீனாவின் அங்கம் அல்ல அது தனி நாடு என்ற அமெரிக்காவின் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தும் நோக்கில் நான்சி பெலோசியின் பயணம் அமைந்துள்ளது.

தைவான் சென்றடைந்ததும் நான்சி பெலோசி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், தைவானின் துடிப்பான ஜனநாயகத்துக்கு அமெரிக்கா ஆதரவு அளிப்பதை உறுதிப்படுத்தவே தான் இந்த பயணத்தை மேற்கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்தோ – பசுபிக் பிராந்தியத்தில் தைவான் அமெரிக்காவின் முக்கிய பங்குதாரர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தைபேயில் உள்ள ஹயட் நட்சத்திர விடுதியில் பலத்த பாதுகாப்புடன் பெலோசி தங்கவைக்கப்பட்டார்.

இன்று காலை, குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் சென்ற பெலோசியை மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்ற தைவான் அதிபர் சாய் இங்வென், அவருக்கு நினைவுப் பரிசுகளை வழங்கினார்.

பின்னர் பேசிய சாய் இங்வென், தைவானின் மிக மிக முக்கிய நண்பர்களில் ஒருவர் பெலோசி என குறிப்பிட்டார். தைவானுக்கு அசைக்க முடியாத ஆதரவை அளித்துள்ளதற்காக அவருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் சாய் இங்வென் கூறினார்.

ஜனநாயக நாடான தைவானுக்கு எதிரான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள், தங்கள் நாட்டின் பாதுகாப்பு மீது மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாகக் குறிப்பிட்ட சாய் இங்வென், எனினும் தைவான் ஒருபோதும் அடிபணியாது என்றும், தங்கள் நாட்டின் இறையாண்மையையும் பாதுகாப்பையும் ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்றும் கூறினார்.

சீன ஆட்சியாளர்களுக்கு நெருக்கமான தைாவானின் எதிர்க்கட்சியான கேஎம்டி கட்சியும், பெலோசியின் வருகைக்கு வரவேற்பு தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

உத்தரகாண்ட் பாஜக முதல்வர் திடீர் ராஜினாமா!

Halley Karthik

7வது மெகா தடுப்பூசி முகாம்; தமிழகம் முழுவதும் இன்று நடைபெறுகிறது

Halley Karthik

மருத்துவ பணியாளர்களுக்கு 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு!

EZHILARASAN D