முக்கியச் செய்திகள் தமிழகம்

நேரடி பணியாளர் தேர்வு அறிவிப்பாணை ரத்து

ஓட்டுநர், அலுவலக உதவியாளர் பதவியிடங்களுக்கு வெளியிடப்பட்டிருந்த நேரடி பணியாளர் தேர்வு அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.

 

டி.என்.ஹெச்.பி (TNHB) Tamil Nadu Housing Board நிறுவனமானது கடந்த 2021 ஆம் ஆண்டு ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இதன் மூலம் 2021 ஆம் ஆண்டு ஆட்சேர்ப்பிற்கு விண்ணப்பிப்பதற்கான நேரடி அதிகாரபூர்வ இணைப்பையும் வழங்கியது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 

டி.என்.ஹெச்.பி வேலைக்கான அனைத்து வகையான அறிவிப்புகள் மற்றும் விவரங்களை தெரிந்து கொள்ளும் வகையிலும், புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் தங்களுக்கான அறிவிப்புகளை தெரிந்து கொள்ளும் வகையில் அந்த அறிவிப்பானையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், ஓட்டுநர், அலுவலக உதவியாளர் பதவிகளில் காலியாக உள்ள 15 பணியிடங்களை நிரப்ப விண்ணப்பிக்க முறை அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேரடி பணியாளர் தேர்வு அறிவிப்பாணையை ரத்து செய்து தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் அறிவித்துள்ளது. நிர்வாக காரணங்களால் முந்தைய அறிவிப்பாணை ரத்து செய்யப்படுவதாக வீட்டுவசதி வாரிய மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் காலமானார்.

EZHILARASAN D

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க 20.62 லட்சம் பேர் விண்ணப்பம்!

Saravana

யூடியூபர் மதனின் மனைவி கைது!

Gayathri Venkatesan