முக்கியச் செய்திகள் மழை இந்தியா தமிழகம்

தமிழ்நாட்டிற்கு ரெட் அலார்ட் எச்சரிக்கை – இந்திய வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டிற்கு இன்று மற்றும் நாளை இரண்டு நாட்களுக்கு அதி கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் கொடுத்துள்ளது.

 

தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்தது. மேலும், தமிழ்நாட்டில், கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை முதல் அதி கனமழையும், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தூத்துக்குடி, சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, கரூர், நாமக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது என குறிப்பிட்டிருந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 

வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டிருந்தது போல், தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் கனமழை பெய்தது.

 

மேலும் திருச்சிராப்பள்ளி, கரூர், நாமக்கல், சேலம், திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்தது. சில மாவட்டங்களில் இன்று காலையிலும் வானம் மேக மூட்டத்துடனே காணப்படுகிறது. இந்நிலையில், காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் மிக கன மழை பெய்யும் என்பதால் இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழ்நாட்டிற்கு ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு நாட்களுக்கு தமிழ்நாட்டில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. மேலும், குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, தமிழக கடலோர பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது.

 

லட்சத்தீவு பகுதிகள், கேரள – கர்நாடக கடலோர பகுதிகள், மாலத்தீவு, தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் மற்றும் தென் மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் இன்று சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் பகுதிகளில் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஹைதி நிலநடுக்கம்; 2 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை

G SaravanaKumar

வெள்ள மீட்புப் பணியில் 312 பேர் – அமைச்சர் ராமச்சந்திரன்

Web Editor

குவைத் நாட்டில் வீட்டு வேலைக்கு சென்ற பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு!

Jeba Arul Robinson