உலகக் கோப்பைக்கு வரமாட்டோம்… பாகிஸ்தான் எச்சரிக்கை!

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை வேறு இடத்துக்கு மாற்றினால், நாங்கள் உலகக்கோப்பைக்கு இந்தியா வரமாட்டோம் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எச்சரித்துள்ளது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அணிகள் பங்கேற்கும் ஆசியப்…

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை வேறு இடத்துக்கு மாற்றினால், நாங்கள் உலகக்கோப்பைக்கு இந்தியா வரமாட்டோம் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எச்சரித்துள்ளது.

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அணிகள் பங்கேற்கும் ஆசியப் கோப்பை கிரிக்கெட் போட்டி விரைவில் நடக்க உள்ளது. கடந்தாண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த ஆசிய கோப்பை, இந்த முறை பாகிஸ்தானில் நடக்கும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக ஆசிய கோப்பை போட்டிகளை பாகிஸ்தானில் இருந்து வேறு இடத்துக்கு மாற்ற ஆசிய கிரிக்கெட் கவுன்சில் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மார்ச் மாதத்துக்குள் ஆசிய கோப்பை நடக்கும் இடத்தை இறுதிபடுத்த வேண்டும். இந்நிலையில் ஆசிய கோப்பையை பாகிஸ்தானுக்கு பதிலாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை கொதிப்படைய செய்துள்ளது.” நடப்பாண்டு ஆசிய கோப்பையை ஏற்கனவே பாகிஸ்தானில் நடத்த முடிவு செய்யப்பட்டுவிட்டது. இப்போது இடத்தை மாற்றுவது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஆசிய கோப்பை போட்டிகளை வேறு இடத்துக்கு மாற்றினால், இந்தாண்டு இந்தியாவில் நடைபெற உள்ள 50 ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தான் பங்கு பெறாது.” என அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.

பாதுகாப்பு காரணமாக இந்தியா, ஆசிய கோப்பை போட்டிகளில் பாகிஸ்தான் செல்லாது என பிசிசிஐ செயலாளர் அமித்ஷா கடந்தாண்டே கூறியிருந்தார். அப்போதே, “நீங்கள் ஆசிய கோப்பையில் கலந்து கொள்ளாவிட்டால், நாங்கள் உங்கள் நாட்டில் நடக்கும் உலகக் கோப்பையை புறக்கணிப்போம்.” என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியிருந்தது. தற்போது ஜெய் ஷா ஆசிய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.