லிஃப்ட் நடந்தே வரும்போல… கவுண்டமணி கலகல!

திரைத்துறையைச் சேர்ந்த கஜேந்திரன் உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்றபோது, கவுண்டமணி பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. பிரபல நடிகரும், திரைப்பட இயக்குநருமான டி.பி. கஜேந்திரன் (68). கே.பாலசந்தர், ராமநாராயணன், விசு போன்ற ஜாம்பவான்களிடம் உதவி…

திரைத்துறையைச் சேர்ந்த கஜேந்திரன் உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்றபோது, கவுண்டமணி பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

பிரபல நடிகரும், திரைப்பட இயக்குநருமான டி.பி. கஜேந்திரன் (68). கே.பாலசந்தர், ராமநாராயணன், விசு போன்ற ஜாம்பவான்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். மிடில் கிளாஸ் மாதவன், பட்ஜெட் பத்மநாபன் போன்ற படங்களை இயக்கினார். பல்வேறு படங்களில் குணச்சித்தர வேடங்களில் நடித்தவர் கஜேந்திரன். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு மேலாக திரைத்துறையில் இருந்து வந்தார். கடந்த சில மாதங்களாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை கஜேந்திரன் காலமானார்.

கவுண்டமணி, செந்தில், வையாபுரி, தம்பி ராமையா, ரமேஷ் கண்ணா உள்ளிட்ட திரைத்துறையினர் கஜேந்திரன் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதற்காக கவுண்டமணி அங்கு சென்றிருந்தபோது அவர் பேசிய ஓர் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. கவுண்டமணியின் கையை பிடித்தபடி கஜேந்திரன் வீட்டுக்கு அழைத்து சென்றனர். அங்கே லிஃப்ட்டுக்காக கவுண்டமணி காத்திருந்தார்.

“என்ன ஆச்சு, எப்ப இறந்தார்?” என்று அருகில் இருந்தவர்களிடம் விசாரித்தார். லிஃப்ட் வருவதற்கு சற்று தாமதமாகிக் கொண்டிருந்தது. அருகில் உள்ளவர், “இந்தா லிஃப்ட் வருது.” என்று கூறினார். அதற்கு கவுண்டமணி, “லிஃப்ட் நடந்தே வரும் போல இருக்கு.” என்று சொன்னதும் அருகில் இருந்தவர்கள் சிரித்தனர். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. “தள்ளாத வயதிலும், எப்போதும் நகைச்சுவை உணர்வுடன் இருப்பவர் கவுண்டமணிதான். அவரது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது.” என அவரது ரசிகர்கள் கமென்ட் செய்து வருகின்றனர்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.