முக்கியச் செய்திகள் விளையாட்டு

இன்றைய ஐபிஎல் போட்டியில் பஞ்சாப், ராஜஸ்தான் அணிகள் மோதல்

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் பஞ்சாப் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன.

14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் மாதம் 9- ஆம் தேதி தொடங்கி நடந்து வந்தது. இதில் சில வீரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் மே 3- ஆம் தேதியுடன் போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டன. இந்நிலையில், நிறுத்தப்பட்ட போட்டிகள் கடந்த 19ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கி நடபெற்று வருகிறது. இந்நிலையில், இன்றைய ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, கே.எல். ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

புள்ளி பட்டியலில் இரு அணிகளும் பின் தங்கியிருப்பதால், இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் இரு அணிகளுக்கும் ஏற்பட்டுள்ளது. பிளே ஆப் வாய்ப்பை தக்க வைத்து கொள்ள இந்த போட்டியில் வெற்றி முக்கியம் என்பதால், இரு அணிகளும் முனைப்புடன் விளையாடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இரு அணிகளும் இதுவரை 22 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியதில் ராஜஸ்தான் அணி 12 போட்டிகளிலும், பஞ்சாப் அணி 10 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

Advertisement:
SHARE

Related posts

கொரோனா நிவாரண நிதி 2ம் தவணை: குறிப்பிட்ட தேதிக்குள் வழங்க தமிழக அரசு உத்தரவு

Vandhana

டாஸ்மாக் கடையை உடைத்து ரூ.3 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள மதுபானங்கள் திருட்டு

Vandhana

தேசிய பாதுகாப்பு அகாடமியில் பெண்களுக்கு வாய்ப்பு மறுப்பு; மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

Halley karthi