ஊரக உள்ளாட்சி தேர்தலில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதை பறக்கும் படை உறுதி செய்ய வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களை சேர்ந்த தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில், குற்றவியல் நீதிபதி, காவலர்கள் அடங்கிய பறக்கும் படை அமைக்க வேண்டும் எனவும், குறைந்தது 3 ஊராட்சி ஒன்றியங்களுக்கு ஒரு பறக்கும் படை அமைத்து கண்காணிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதை பறக்கும் படை உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உரிய ஆவணங்களின்றி 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் எடுத்துச் சென்றால். அதனை பறிமுதல் செய்ய வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்படும் பணம், வாகனங்களை கருவூலத்தில் செலுத்த வேண்டும் எனவும், 24 மணி நேரமும் பறக்கும்படையினர் தொடர்சோதனையை மேற்கொள்ளவேண்டும் எனவும் மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.







