இந்திய மகளிர் அணி கேப்டன் மிதாலி ராஜ் ஹெல்மெட்டில் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் வீசிய பந்து தாக்கியது.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு டெஸ்ட், ஒருநாள், டி 20 என 3 வகையான கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்க உள்ளனர். இன்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்கள் சேர்தது. இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 41 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 227 ரன்கள் விளாசி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆட்ட்டத்தின் நடுவே 14.4 ஓவரில் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் பெர்ரி வீசிய பவுன்சர் பந்தை எதிர்கொண்ட இந்திய அணி கேப்டன் மிதாலிராஜ், பந்து வரும் வேகத்தை கனித்து நகர்வதற்கு முன்பாகவே பந்து அவரது ஹெல்மெட்டை தாக்கி பவுண்டரி லைனை நோக்கி சென்றது. அந்த சமயத்தில் அவர் ஓடி 1 ரன்னை எடுத்தார். இதையடுத்து வந்த மருத்துவகுழுவினர் மிதாலிராஜை பரிசோதித்து அவர் நலமாக உள்ளதாகவும், ஆட்டத்தை அவர் தொடரலாம் எனவும் தெரிவித்து சென்றனர். இந்த போட்டியில் இந்திய அணியில் அதிகபட்சமாக மிதாலிராஜ் 63 ரன்கள் விளாசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Good news – Mithali Raj is good to continue after copping this big hit to the helmet off Ellyse Perry #AUSvIND pic.twitter.com/HH82eDXOAs
— cricket.com.au (@cricketcomau) September 21, 2021







