திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பேருந்து நிலைய பணிகளுக்காக பயணிகள் காத்திருக்கும் நடைமேடைகள் அடைக்கப்பட்டதால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டதிற்கு உட்பட்ட பழனி நகராட்சி புகழ்பெற்ற ஆன்மிக தலங்களுள் ஒன்றாகும். இங்கு அமைந்துள்ள முருகன் கோயிலை தரிசிப்பதற்காக நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.இங்கு பயணிகளின் வசதிக்கென புதிய மற்றும் பழைய பேருந்து நிலையங்கள் அமைந்துள்ளன.குறிப்பாக இங்குள்ள பழைய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்ட கடைகள் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலானதால் நகராட்சியின் சார்பில் நிதி ஒதுக்கப்பட்டு அவற்றை புதுபிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
அங்குள்ள வியாபாரிகள் வைத்த கோரிக்கையை ஏற்று பேருந்து நிலையத்திற்கு உள்ளாகவே தற்காலிகமாக கடைகள் அமைக்கப்பட்டு வருகிறது.அவ்வாறு அமைக்கப்படும் கடைகள் பயணிகள் காத்திருக்கும் நடைமேடையை ஆக்கிரமித்து கட்டுபடுவதால் பொதுமக்கள் கடும் அவதியடடைந்துள்ளனர். தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் முதியவர்கள்,நோயாளிகள் உள்ளிட்டவர்கள் சற்றே இளைப்பாற வசதியாக இருந்த நடைமேடை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் பயணிகள்
சுட்டெரிக்கும் வெயிலில் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கடைகள் கட்டி முடிக்க இரண்டு ஆண்டு காலம் ஆகலாம் என்பதால் அதுவரை நடைமேடை ஆக்கிரமிக்கப்பட்டிருந்தால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாவர்
என்பதால் தற்காலிக கடைகளை பேருந்து நிலையத்திற்கு வெளியே அமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
——வேந்தன்