பட்டுக்கோட்டை : அரசு விடுதியில் காலை உணவருந்திய 30 பள்ளி மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி!

பட்டுக்கோட்டையில் உள்ள அரசு விடுதியில் காலை உணவருந்திய 30 பள்ளி மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் ஆறாம் வகுப்பிலிருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவிகள், தலைமை தபால் நிலையம் அருகே உள்ள அரசு ஆதிதிராவிட மகளிர் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று(ஜூன்.13) காலை எட்டு மணி அளவில் மாணவிகள் காலை உணவாக சாதம், புளிக்குழம்பு, உருளைக்கிழங்கு பொரியல் ஆகியவற்றை சாப்பிட்டு உள்ளனர். தொடர்ந்து 11 மணியளவில் திடீரென அந்த மாணவிகளுக்கு வாந்தி ஏற்பட்டு மயக்கம் அடைந்துள்ளனர்.

இதையைடுத்து அந்த மாணவிகளை உடனடியாக பட்டுக்கோட்டையை
அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக பட்டுக்கோட்டை டிஎஸ்பி ரவிச்சந்திரன்,  வட்டாட்சியர் தர்மேந்திரா உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று இது பற்றி விசாரணை மேற்கொண்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.