முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

ஹரியானாவில் பதுங்கியுள்ள அம்ரித் பால் சிங் – வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி

பென்ஸ் கார் முதல் பைக்…சினிமாவை மிஞ்சும் சேசிங் .. அடுத்தடுத்து கெட்டப் சேஞ்ச் என பல்வேறு தோற்றங்களுடன் காவல்துறையினரையே சுத்தலில் விடும், அம்ரித் பால் சிங்கை கைது செய்ய, உதவுமாறு பொதுமக்களிடம் போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில், அவர் ஹரியானாவில் ஒரு பெண்ணின் வீட்டுக்குள் பதுங்கி இருந்து செல்லும் சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அம்ரித் பால் சிங். இவர் கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் ‘வாரிஸ் பஞ்சாப் தே’ என்ற அமைப்பின் தலைவராக செயல்பட்டு வருகிறார். இந்த அமைப்பானது மறைந்த நடிகர் தீப் சித்துவால் உருவாக்கப்பட்டது. அதனை தற்போது அம்ரித் பால் சிங் தலைமையேற்று நடத்தி வருகிறார். பஞ்சாப்பை பிரித்து தனி நாடாக அறிவிக்க கோரும் காலிஸ்தான் ஆதரவு அமைப்பாகவும் இது செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் தலைவராக அம்ரித் பால் சிங் பொறுப்பேற்றதில் இருந்தே மீண்டும் பிரிவினைவாத கொள்கைகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இளைஞர்களை கொண்டு போராளி இயக்கத்தை உருவாக்கும் அம்ரித்பால் சிங்' - பஞ்சாப் காவல்துறை தகவல்

அந்த வகையில், அம்ரித் பால் சிங்கின் அடாவடி ,மற்றும் வன்முறை நடவடிக்கைகள் அந்த மாவட்ட காவல்துறையினருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அண்மையில், ரூப்கர் மாவட்ட காவல்துறையினர், அம்ரித் பால் சிங் உள்ளிட்ட 3 பேர் மீது கடத்தல் வழக்கு பதிவு செய்ததோடு, இந்த வழக்கில் தொடர்புடைய லவ் ப்ரீத் சிங்க் என்பவரையும் கைது செய்தனர். அப்போது அம்ரித் பால் சிங் தனது அமைப்பை சேர்ந்த லவ் ப்ரீத் சிங்கை மீட்பதற்காக தனது ஆதரவாளர்களுடன் காவல் நிலையத்தில் நுழைந்து, அடாவடி சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து இந்த பிரச்சனை பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அம்ரித் பால் சிங்கிற்கு எதிராக தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து அம்ரித் பால் சிங்கை கைது செய்ய பஞ்சாப் காவல்துறை முடிவு செய்தது. இந்த தகவலை அறிந்து கொண்ட அம்ரித் பால் சிங் தலைமறைவானார். கைது நடவடிக்கையில் இறங்கிய காவல்துறையினரால் அவரது ஆதரவாளர்கள் 100-க்கும் மேற்பட்டவர்களை மட்டுமே கைது செய்ய முடிந்தது. அம்ரித் பால் சிங்கிற்கு எதிராக, காவல்துறையினர் மேற்கொண்ட இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து , லண்டன் உள்ள இந்திய தூதரகத்தில் இந்திய தேசிய கொடி இறக்கப்பட்டு, காலிஸ்தான் கொடி ஏற்றப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், பஞ்சாப் பிரிவினையைக் கோரும் காலிஸ்தான் இயக்கத்தை சேர்ந்த அம்ரித் பால் சிங்-ஐ தற்போது பஞ்சாப் காவல்துறை அதிகாரிகள் கடந்த ஒரு வார காலமாக தீவிரமாக தேடி வருகின்றனர். ஆயிரக்கணக்கான போலீசார் வலை வீசி தேடி வரும் நிலையிலும் தற்போது வரை அவரை கைது செய்ய முடியாதது, பஞ்சாப் மாநில காவல்துறைக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அம்ரித் பால் சிங் பென்ஸ் கார் முதல் பைக்…சினிமாவை மிஞ்சும் சேசிங் .. அடுத்தடுத்து கெட்டப் சேஞ்ச் என பல்வேறு தோற்றங்களுடன் காவல்துறையினரையே சுத்தலில் விட்டு வருகிறார்.

இப்படி பல்வேறு தோற்றத்துடன் கெட்டப் சேஞ்ச் செய்து வரும் அம்ரித் பால் சிங்கின் புகைப்படத்தை, பஞ்சாப் காவல்துறை வெளியிட்டு கைது செய்ய உதவுமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தது. இதற்கிடையே கடந்த 18 ஆம் தேதி சுங்கச்சாவடி ஒன்றின் வழியாக அம்ரித் பால் சிங் காரில் தப்பித்து செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகியிருந்தன. இந்த நிலையில் அம்ரித் பால் சிங் தற்போது ஹரியானாவில் ஒரு பெண்ணின் வீட்டுக்குள் பதுங்கி இருந்து செல்லும் சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. அதில் தன்னை யாரும் அடையாளம் கண்டு கொள்ள முடியாத படி, முகத்தை குடையால் மறைத்துக்கொண்டு வெளியே செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது .

இந்த நிலையில், ஹரியானாவில் இருந்து அம்ரித்பால் மற்றும் பாப்பல்ப்ரீத் ஆகிய இருவரும் உத்தரகாண்ட் மாநிலத்திற்கு தப்பி செல்ல உள்ளதாகவும், அங்கும் போலீசாரை தயார் நிலையில் இருக்கும் படி அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இன்ஸ்டாவிலும் விஜய் – அதிவேக 10 லட்சம் Followers-ஐ பெற்று உலக சாதனை!!

G SaravanaKumar

நியூஸ்7 தமிழ்-வராண்டா ஐஏஎஸ் இணைந்து நடத்திய “உயரம் தொடு” ஐஏஎஸ் பயிற்சிக்கான நுழைவுத் தேர்வு கருத்தரங்கம்

Web Editor

தமிழ்நாட்டில் தடுப்பூசிகள் கையிருப்பில் தற்போது இல்லை: சுகாதாரத்துறை செயலர்