சிம்பு நடித்த ’பத்து தல’ என்ற திரைப்படம் வரும் 30ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் சென்சார் தகவல் குறித்த அறிவிப்பை பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
பத்து தல படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் சிம்புவுடன் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா பத்து தல படத்தை இயக்கியுள்ளார். படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிவடைந்து வரும் 30ஆம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாக உள்ளது. இதனால் படக்குழு புரொமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் பத்து தல திரைப்படம் தற்போது சென்சார் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இந்த படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. படத்தில் அதிக சண்டிகாட்ச்சிகள் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
https://twitter.com/StudioGreen2/status/1638503367734591490?s=20
குறிப்பாகப் படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 32 நிமிடம் எனவும் தகவல் வந்துள்ளதாகவும், சென்சார் காப்பியில் இந்தப் படத்தைப் பார்த்த தயாரிப்பாளர், முதல் பாதியை விடவும் இரண்டாம் பாதி தாறுமாறாக இருப்பதாகத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து இதுபோன்ற பாசிட்டிவான ரிப்போர்ட்ஸ் வருவதால் சிம்பு ரசிகர்கள் இப்படமும் ஹிட் படமாக அமையும் என்ற நம்பிக்கையில் இருப்பதோடு படத்தின் வெற்றியை இப்போதே கொண்டாடி வருகின்றனர்.







