“இடையூறுகள், விமர்சனங்கள் வந்தால் புன்னகையுடன் கடந்து செல்லுங்கள்!” – தவெக செயற்குழு உறுப்பினர்களுக்கு விஜய் அறிவுரை!

நடிகர் விஜய் விரைவில் அரசியல் கட்சித் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், பிப்.2-ம் தேதி ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற புதிய கட்சியை தொடங்கினார். அந்த கட்சியின் தலைவராக நடிகர் விஜய் தேர்வு செய்யப்பட்டார். கட்சியை…

நடிகர் விஜய் விரைவில் அரசியல் கட்சித் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், பிப்.2-ம் தேதி ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற புதிய கட்சியை தொடங்கினார். அந்த கட்சியின் தலைவராக நடிகர் விஜய் தேர்வு செய்யப்பட்டார். கட்சியை தொடங்கிய விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில்,  தமிழக வெற்றி கழக செயற்குழு உறுப்பினர்களுக்கு காணொளி வாயிலாக  அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவுரை வழங்கியதாக தவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி தமிழக வெற்றி கழக தலைவரும் நடிகருமான விஜய் கூறியதாவது:

இடையூறுகள், விமர்சனங்கள் வந்தால் புன்னகையுடன் கடந்து செல்லுங்கள். மக்கள் பிரச்சனையில் கவனம் செலுத்துங்கள். குக்கிராமங்களிலும் கட்சியைப் பற்றி தெரியப்படுத்த வேண்டும்.

2024 தேர்தலுக்குப் பின் கட்சிப் பணிகள் தீவிரமடையும். இவ்வாறு நடிகர் விஜய் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.