48 மணி நேரத்திற்குள் வேட்பாளர்களின் குற்றப்பின்னணியை வெளியிட உத்தரவு

வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்ட 48 மணி நேரத்திற்குள் அவர்களுடைய குற்றப் பின்னணி குறித்த விவரங்களை சம்மந்தப்பட்ட அரசியல் கட்சிகள் வெளியிட வேண்டும் என உச்சநீதிமன்றம் காலக்கெடு நிர்ணயம் செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற…

வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்ட 48 மணி நேரத்திற்குள் அவர்களுடைய குற்றப் பின்னணி குறித்த விவரங்களை சம்மந்தப்பட்ட அரசியல் கட்சிகள் வெளியிட வேண்டும் என உச்சநீதிமன்றம் காலக்கெடு நிர்ணயம் செய்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற பீகார் சட்டமன்ற தேர்தலின்போது இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அரசியல் கட்சிகள் தங்கள் கட்சி சார்பில் போட்டியிட வாய்பளித்துள்ள நபர்களின் குற்றப் பின்னணி குறித்த விவரங்களை வேட்பு மனு தாக்கல் செய்யும் 2 வாரங்களுக்கு முன்பே வெளியிட வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு பின்னரும் வேட்பாளர்களின் குற்றப்பின்னணி குறித்த விவரங்களை வெளியிடாமல் இருக்கும் கட்சிகளின் சின்னங்களை ரத்து செய்ய வேண்டும் என கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு, நீதிபதி ரோகிண்டன் நரிமன் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், தங்களது முந்தைய உத்தரவில் இன்று சில மாற்றங்களை செய்தனர், அதில் குறிப்பாக, தேர்தலில் கட்சி சார்பில் களம் காண வேட்பாளர்களாக ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து 48 மணி நேரத்திற்குள் அவர்களின் குற்றப்பின்னணி விவரத்தை வெளியிட வேண்டும் என்ற காலக்கெடு நிர்ணயித்து உத்தரவிட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.