கோவை மாநகர உளவுத் துறை உதவி ஆணையராக பார்த்திபன் நியமனம்

கோவை மாநகர உளவுத் துறை உதவி ஆணையாளராக சிறப்பு புலனாய்வுப் பிரிவு உதவி ஆணையாளர் பார்த்திபனை நியமித்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். தேசிய புலனாய்வு முகமை தமிழகம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் பாப்புலர் பிரண்ட்…

கோவை மாநகர உளவுத் துறை உதவி ஆணையாளராக சிறப்பு புலனாய்வுப் பிரிவு உதவி ஆணையாளர் பார்த்திபனை நியமித்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

தேசிய புலனாய்வு முகமை தமிழகம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகங்கள், நிர்வாகிகள் வீடுகளில் நேற்று முன்தினம் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையை தொடர்ந்து தமிழகத்தைச் சேர்ந்த 3 பேரை கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து, கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் ஆர்எஸ்எஸ், பாஜக, இந்து முன்னணி அலுவலகங்கள், நிர்வாகிகளின் வீடுகளில் பெட்ரோல் வெடிகுண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன.

இந்நிலையில், காலியாக இருக்கும் கோவை மாநகர உளவுத் துறை உதவி ஆணையாளர் பொறுப்புக்கு சிறப்பு புலனாய்வுப் பிரிவு உதவி ஆணையாளர் பார்த்திபன் நியமிக்கப்பட்டுள்ளார். சிங்காநல்லூர் சரக உதவி ஆணையாளராக பணியாற்றும் அருண் சிறப்பு புலனாய்வுப் பிரிவை உதவி ஆணையாளராக நியமித்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.