நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைகிறது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 19-ம் தேதி தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதலே பெகாசஸ் விவகாரம் மற்றும் விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் குறித்து எதிர்க்கட்சியினர் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனால், அனைத்து நாட்களிலும் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. இந்த கூட்டத்தொடரில் முதல் முறையாக, மக்களவையில் எதிர்க்கட்சிகளின் அமளி இன்றி நேற்று ஓபிசி மசோதா மட்டுமே நிறைவேற்றப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆகஸ்ட் 13-ம் தேதி வரை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இரு நாட்களுக்கு முன்பாகவே, இன்றுடன் கூட்டத்தொடர் நிறவடைகிறது. முன்னதாக 19 நாட்களில் 30க்கும் மேற்பட்ட மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.