முக்கியச் செய்திகள் இந்தியா

40 கோடி மக்கள் ‘பாகுபலி’: பிரதமர் மோடி

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் ஆக்கப்பூர்வமாக விவாதங்கள் நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி ஆகஸ்ட் 13-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தொடரில், மின்சார சட்ட திருத்தம், சிறு துறைமுகங்கள் திருத்த மசோதா, அணைகள் பாதுகாப்பு உள்ளிட்ட 31 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இன்று தொடங்கும் கூட்டத்தொடரில், மாநிலங்களவை அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு மேகதாது அணை விவகாரம் குறித்து விவாதிக்க திமுக எம்.பி. திருச்சி சிவா நோட்டீஸ் அளித்துள்ளார். இதே போல், காங்கிரஸ் எம்பி கே.சி. வேணுகோபால், பெட்ரோல், டீசல் விலையேற்றம் குறித்து விவாதிக்கக் கோரி நோட்டீஸ் அளித்துள்ளார்.

காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் பெட்ரோல் விலையேற்றம் குறித்தும், பணவீக்கம் குறித்தும் விவாதிக்கக் கோரியுள்ளார். இதே போல், ஆம் ஆத்மி எம்.பி. பகவந்த் மன், காங்கிரஸ் எம்பிக்கள் மணிஷ் திவாரி, ஜஸ்பிர் சிங் கில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்பிக்கள் எளமரம் கரீம், சிவதாசன் ஆகியோர் விவசாயிகள் போராட்டம் குறித்து விவாதிக்கக் கோரி நோட்டீஸ் அளித்துள்ளனர். தேசிய பாதுகாப்பு குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பவுள்ளதாக காங்கிரஸ் எம்பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்தார்.

இதனிடையே, நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க சைக்கிளில் வந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள், பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மழைக்கால கூட்டத்தொடரில் கலந்து கொள்ளும் முன்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரதமர் மோடி, கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த அனைவரின் ஒத்துழைப்பும் தேவை தெரிவித்தார். அனைத்து விவகாரங்கள் குறித்தும் விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளதாக பேசிய அவர், ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் எனக் கூறினார்.

 

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, கொரோனாவில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள  அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். தடுப்பூசி செலுத்திக்கொண்ட 40 கோடி மக்களும் ‘பாகுபலி’ என பிரதமர் மோடி தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram