‘பார்க்கிங்’ பட வெற்றி – இயக்குநருக்கு தங்கக் காப்பு கொடுத்த ஹரிஷ் கல்யாண்!

‘பார்க்கிங்’ படத்தின் வெற்றி விழாவில் நடிகர் ஹரிஷ் கல்யாண், படத்தின் இயக்குநர் ராம்குமாருக்கு தங்கக் காப்பு பரிசளித்தார். ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரா, பிரார்த்தனா நாதன், இளவரசு…

‘பார்க்கிங்’ படத்தின் வெற்றி விழாவில் நடிகர் ஹரிஷ் கல்யாண், படத்தின் இயக்குநர் ராம்குமாருக்கு தங்கக் காப்பு பரிசளித்தார்.

ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரா, பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘பார்க்கிங்’ திரைப்படம் மூன்றாவது வாரமாக வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகிறது. ‘பார்க்கிங்’ படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசுவதற்கு முன்னதாக நடிகர் ஹரிஷ் கல்யாண், படத்தின் இயக்குநர் ராம்குமாருக்கு தங்கக் காப்பு பரிசளித்தார்.

அப்போது பேசிய ஹரிஷ் கல்யாண்,

“இந்த வெற்றி எனக்கு மிகவும் முக்கியமான ஒன்று. பார்வையாளர்களை தியேட்டரில் நேரில் சந்தித்தோம். இந்தப் படத்தை எல்லோரும் அப்படி கொண்டாடினார்கள். இந்த வருடத்தின் ஹிட் படங்களில் இது நிச்சயம் இருக்கும் என பலரும் சொன்னார்கள். நீங்கள் கொடுத்த அன்பால்தான் இங்கு நிற்கிறோம். இந்தப் படமும், வெற்றியும் எனக்கு மிகவும் முக்கியமான ஒன்று. வெற்றி இயக்குநர் பட்டியலில் ராம் நிச்சயம் இருப்பார்” என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.